மீண்டும் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்... பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்று கொண்டார்!

 
ஷெபாஸ் ஷெரீப்

வழக்கமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு சவால்களுடன் புதிய தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடு தனது பிரதமரைத் தேர்ந்தெடுத்துள்ளது. பாகிஸ்தானின் 33வது பிரதமராக பிஎம்எல்-என் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷெபாஸ் ஷெரீப் இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். 

பிரதமர் நாற்காலியில் அமருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) வேட்பாளர் ஷெபாஸ் ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். 72 வயதான ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமரும், கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தேசிய சட்டமன்றத்தில் நடைபெற்றது. இன்று மார்ச் 3 ம் தேதி ஜனாதிபதி மாளிகையான ஐவான்-இ-சதர், ஷெபாஸ் ஷெரீப்பின் தலைமையில் பதவியேற்றார்.

பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த ஷெபாஸ், வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தும் திறமையான நிர்வாகியாக அறியப்பட்டார். ஆனால், 2022ல் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது, ​​இங்கிலாந்தில் இருந்து சாவி கொடுக்கும்  சகோதரர் நவாஸ் ஷெரீப்பின் கைப்பாவையாக மாறினார். சுயமாக முடிவெடுக்கத் தவறிய அவர், பலவீனமான பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலின் சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web