ஷேக் ஹசீனா விசா சேவை ரத்து.. அமெரிக்கா திடீர் முடிவு!
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று முன் தினம் அரசியல் குழப்பங்கள் நெருக்கடி காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா திடீரென பதவி விலகினார். அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது இடைக்கால அரசாங்கத்தின் புதிய அதிபராக மொஹமட் யுனின் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தார் ஷேக் ஹசீனா. இந்நிலையில், இங்கிலாந்தில் அடைக்கலம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுமதி கிடைத்தால் லண்டனில் தஞ்சம் அடைவார். ஆனால் இங்கிலாந்து குடிவரவு சட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் இங்கிலாந்து சென்று புகலிடம் அல்லது தற்காலிக புகலிடம் கோர முடியாது.

எவ்வாறாயினும், இங்கிலாந்து அரசாங்கம் முறையான புகலிடக் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஷேக் ஹசினாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
