வாகை சூடு விஜய்... தாய் ஷோபா சந்திரசேகர் தளபதிக்கு வாழ்த்து... !

 
vijay

நடிகர் விஜய்   ”தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  தனது அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருப்பதாக நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.  2026ல்   நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு. நாடாளுமன்ற தேர்தல் இலக்கு கிடையாது. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவும் கிடையாது எனவும்   அறிவித்துள்ளார்.   


இன்று விஜய்  அரசியல் கட்சி தொடங்கியதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் தாய்   ஷோபா சந்திரசேகர் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து   ஷோபா சந்திரசேகர், “ தனக்கு பின்னால் இருப்பவர்களும் முன்னால் வர வேண்டும் என்று நினைப்பவர் விஜய். ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு உள்ளது.  சாதி, மதத்தில் உடன்பாடு இல்லாதவர். வாகை சூடு விஜய்” என கூறியுள்ளார்.
 இதேபோல் நடிகை ஷனம் செட்டி  , “ வா தலைவா..தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வாழ்த்துகள் விஜய் சார். நாங்கள் உங்களை உண்மையாக நம்புகிறோம். நீங்கள் அனைவருக்கும் சமமான , ஊழல் இல்லாத, சாதிமத பேதமில்லாதவராக இருப்பீர்கள்” என  தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web