அதிர்ச்சி! துருக்கிக்கு நிவாரணப் பொருட்களுடன் பறந்த இந்திய விமானம்! வான்வெளியை மறுத்தது பாகிஸ்தான்!

 
நிவாரண விமானம்

துருக்கியில் கடவுள் கண் அயர்ந்த நேரத்தில் சாத்தான் சடுகுடு விளையாடி ஆயிரக்கணக்கில் மனிதர்களைக் கொன்று குவித்தது உலகம் முழுவதுமே கண்ணீரை வரவழைத்தது. மீட்பு பணியில் உலக நாடுகளின் உதவியை துருக்கி கோரி இருந்த நிலையில், உடனடியாக இந்திய மீட்பு பணி வீரர்களை இந்தியா அனுப்பி வைத்தது. 

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய என்.டி.ஆர்.எஃப் விமானம், துருக்கி செல்வதற்கு வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் மறுத்ததால் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவுக்கான துருக்கியின் தூதர் ஃபிரட் சுனெல், தனது நாட்டிற்கு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதில் இந்திய அரசின் பெருந்தன்மைக்காக இந்தியாவை ‘தோஸ்த்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

துருக்கிக்கு உதவி அனுப்பியதற்காக இந்தியாவிற்கு ஃபிரட் சுனெல் நன்றி தெரிவித்ததோடு, தேவையில் உதவுகிற நண்பர் உண்மையில் நல்ல நண்பர்’ என்று கூறினார். இந்தியா வழங்கிய உதவிக்கு சமூக ஊடகங்களில் நன்றியும் தெரிவித்திருந்தார்.


தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன், 100 பணியாளர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக பறக்கத் தயாராக உள்ளன என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  முரளீதரன் துருக்கி தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அனுதாபத்தையும் மனிதாபிமான ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

பிரதம மந்திரி அலுவலகம் இது தொடர்பாக ஒரு கூட்டத்தையும் நடத்தியது. மருத்துவ குழுக்கள், மீட்பு குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் துருக்கி குடியரசின் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் உடனடியாக அனுப்பப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.


தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களை உள்ளடக்கிய இரண்டு குழுக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பறக்கத் தயாராக உள்ளன என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

மருத்துவக் குழுக்கள் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. துருக்கி அரசு மற்றும் அங்காராவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள துணை தூதரக அலுவலகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமானம் நிவாரண பொருட்கள்

துருக்கியில் 24 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், ஈராக் மற்றும் ருமேனியா, ஜார்ஜியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் நிலநடுக்கத்தின் விளைவுகள் உணரப்பட்டன என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

 

 

From around the web