அதிர்ச்சி... ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது... இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!
தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் போது எல்லையை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில், ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமேஸ்வரத்தில் 30 பேர் மற்றும் நெடுந்தீவு அருகே 17 பேர் அடங்கியுள்ளனர். மேலும், 5 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், தாக்குதல் நடத்துதல் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தொடர்ச்சியான சிறை பிடிப்பு மற்றும் மீன்பிடிப் படகுகள் பறிமுதல் சம்பவங்களைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வந்துள்ளார். மீனவர்கள் குற்றம் சாட்டி கூறுவது போல், இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
