அதிர்ச்சி... ஓடும் ரயிலில் இளம்பெண் முன் ஆபாச செயல்... வீடியோ எடுத்ததால் ஓட்டமெடுத்த காவலர்!

 
ரயில்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக தான் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. மாணவிகளை பதம் பார்க்கும் ஆசிரியர், தலைமையாசிரியர், கல்லூரிகளில் பேராசிரியர், நோயாளிகளை நாசம் செய்யும் மருத்துவர்கள், நடிகைகளிடம் வரம்பு மீறும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் செய்திகளில் தினந்தோறும் இடம்பெறுகிறது. இந்நிலையில், சென்னையில் புறநகர் ரயிலில் பெண் முன்பு பாலியல் ரீதியாக மோசமாக செயலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது

சென்னை மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அப்பெண்ணின் முன்பாக ஒருவர் அமர்ந்துகொண்டு மோசமான பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தாலும், துணிச்சலுடன் வீடியோ எடுத்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நபர், பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி ஓட்டம் பிடித்துள்ளார்.

குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

இது தொடர்பாக இந்தப் பெண் பல்லாவரம் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது தாம்பரம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிவந்த இரும்புலியூரை சேர்ந்த கருணாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கருணாகரனை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் பெண்ணிடம் போலீஸ்காரரே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web