போதைப் பொருட்களின் கூடாரமாகிறதா தமிழகம்... போதை ஊசி போட்டுக்கொண்ட 3 இளைஞர்கள் மயக்கம்... மருத்துவமனையில் அனுமதி!

 
போதை ஊசி

தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாகிறதா என்கிற கேள்வி பொதுமக்களிடையே சமீபமாக அதிகரித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் வட மாநிலங்களைக் குறைச் சொல்லும் நாம், வடமாநில மாஃபியா கும்பல்களைப் போன்றதொரு சமூகத்தை நமக்குத் தெரியாமலேயே உருவாக்கி வருகிறோம்.

பேருந்து நிலையங்களில் பள்ளி மாணவிகள் பீர் பாட்டில்களுடன் நிற்பதில் துவங்கி, மாணவிகள் சிகரெட் புகைப்பது, மாணவர்கள் போதையில் நடுரோட்டில் தள்ளாடியபடி நடப்பது, அரசு பேருந்திற்குள்ளேயே மாணவிகள் பீர் குடிப்பது என்று அவ்வப்போது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைக்க செய்கிறது.

தமிழகத்தில் நடைப்பெறுகின்ற குற்ற சம்பவங்களில் பெரும்பாலானவை போதை ஆசாமிகளால் நடைபெற்றது என்கின்றன புள்ளி விவரங்கள். சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில், வீட்டின் மொட்டை மாடியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை கொடுங்கையூரில் போதை ஊசி செலுத்திக் கொண்ட 3 இளைஞர்கள் மயங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திலும் போதை ஊசி விற்பனை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு ஏன்? புகழ்பெற்ற கல்லூரியைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் போலீசார் போதைப்பொருட்களைத் தேடி சோதனையிட்டு கைப்பற்றிய சம்பவம் எல்லாம் நிலைமை கைமீறிச் சென்றதன் விளைவு தானே?

சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (26). தனியாருக்கு சொந்தமான ஸ்டீல் கம்பெனி ஒன்றில் வேலைச் செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

அதிர்ச்சி... புற்றுநோய் மருந்தில் கலப்படம்...  ஒரு ஊசி ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்தது அம்பலம்... மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது!

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் எழில் நகர் தண்டவாளம் அருகே, கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் 4வது தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (20, முதல் தெருவைச் சேர்ந்த நிதிஷ்குமார் (22) உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்துக் கொண்டு போதை ஊசியை உடலில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர், அனைவரும் அவரவர்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பிரசாந்த் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரது குடும்பத்தினர் பதறியடித்தப்படி அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

போதை ஊசிகள்

இதே போல் நேற்று அதிகாலை 4 மணியளவில் ராஜேஷ் உடல்நிலை மோசமானதால் அவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் நேற்று காலை 7 மணியளவில் நிதிஷ்குமாரையும் உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர்கள் 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இவர்களுக்கு போதை ஊசி சப்ளை செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!