கோயில் கொடை விழாவில் அதிர்ச்சி... 3 பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு!

 
திருட்டு நகைகள் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தூர் காளியம்மன் கோவில் கொடை விழாவிற்கு வந்திருந்த   பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் காளியம்மன் கோவிலில் கொடை விழாவில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். 

இதில், குளத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சேது அம்மாள் (75) என்பவரிடமிருந்து  3பவுன், மேல தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஏலத்தாய் (60) என்பவரிடமிருந்து 2 பவுன், செல்லத்துரை மனைவி பெத்தம்மாள் (75) என்பவரிடம் 2பவுன் என மொத்தம் 7பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்று விட்டனர். 

இது குறித்து 3 பெண்களும் தனித்தனியாக குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை