அதிர்ச்சி... வனத்துறை அதிகாரியை கொல்ல முயற்சி... விபத்து போல நாடகமாடிய கணவன்!

 
வனத்துறை

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் கதோர் கிராமத்தைச் சேர்ந்த நிகஞ் கோஸ்வாமி, தனது மனைவி சோலங்கியை சுட்டுக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சோலங்கி வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே கருத்து முரண்பாடுகள் அதிகரித்து வந்த நிலையில், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் கூறி சோலங்கி, கோஸ்வாமி மீது போலீசாரிடம் முன்பு புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோஸ்வாமி தனது மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு

இந்த திட்டத்தில் அவரது நண்பன் ஈஸ்வரும் இணைந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. திட்டம் படி, இந்த மாதம் 6ம் தேதி மாலை பணி முடித்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த சோலங்கியை, ஆள்நடமாட்டம் குறைந்த வனப்பகுதியில் கோஸ்வாமி மற்றும் ஈஸ்வர் தடுத்துள்ளனர். மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சோலங்கி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் படுகாயமடைந்தார்.

இதற்குப் பிறகு நடந்த சம்பவத்தை விபத்து போல காட்டுவதற்காக, சோலங்கியின் காரை அருகிலிருந்த மரத்தில் மோதச் செய்து சித்தரிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அப்பகுதியை கடந்து சென்றவர்கள் சோலங்கியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி

சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோடிய கோஸ்வாமி மற்றும் ஈஸ்வரை தேடிய போலீசார், தீவிர விசாரணையின் மூலம் இருவரையும் நேற்று கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?