அதிர்ச்சி... இளம்பெண்ணிடம் கிறிஸ்தவ மத போதகர் பாலியல் அத்துமீறல்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜெபம் நடத்துவதாக கூறி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கிறிஸ்தவ மத போதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கெனிட்ராஜ் (47). இவர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையில் போதகராக உள்ளார். இவரது வீட்டின் கீழ்தளத்தில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வரும் 26 வயதுடைய இளம்பெண்ணிடம், ‘‘உங்களுக்கு பிசாசு பிடித்துள்ளது, அதனால் ஜெபிப்பதற்காக சபைக்கு வரவேண்டும்’’ என கெனிட்ராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் அவரது சபைக்கு சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணிடம் கெனிட்ராஜ் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வீட்டுக்கு சென்ற கெனிட்ராஜ், தனது மனைவி, பிள்ளைகள் வெளியே சென்றிருப்பதாகவும் இப்போது தனது வீட்டிற்கு வந்தால் ஜெபித்து அனுப்புவேன் என்றும், இல்லையென்றால் உன் கணவர், பிள்ளைகளை கொலை செய்து விடுவேன் என்றும் அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் பயத்தில் அந்த பெண், கெனிட்ராஜ் வீட்டுக்கு சென்ற நிலையில் இளம்பெண்ணிடம் கெனிட்ராஜ் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து ஓடி சென்று இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கெனிட்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதபோதகர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!