அதிர்ச்சி... 11வது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் குதித்து தற்கொலை... காப்பியடித்து மாட்டிக் கொண்டதால் விபரீதம்!

 
கோகுல்ராம்

கல்லூரி செமஸ்டர் தேர்வில் காப்பியடித்து மாட்டிக் கொண்டதால், மன அழுத்தத்தில் கல்லூரியின் 11வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகன் கோகுல்ராம் (19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் நடைப்பெற்ற சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வில் கோகுல்ராம் கலந்து கொண்டார். இந்த தேர்வு, கல்லூரியின் 5வது மாடியில் நடத்தப்பட்டது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவரைப் பார்த்து கோகுல்ராம், காப்பியடித்து தேர்வு எழுதிய நிலையில், அந்த வகுப்பறையில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த பெண் பேராசிரியர் கோகுல்ராமை இது குறித்து கண்டித்துள்ளார். பின்னர், கோகுல்ராமின் தேர்வு விடைத்தாளை வாங்கி கொண்டு, தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பியதாகவும், தனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறும் கூறியதாக தெரிகிறது.

காப்பியடித்து மாட்டிக் கொண்ட அவமானத்தாலும், பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்கிற பயத்தினாலும் மனமுடைந்த கோகுல்ராம், கல்லூரியின் 11வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவர் கோகுல் ராமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web