கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!
கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை டவுனில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வந்தவர் சீமா ரத்தோட்(17). இவர் அங்குள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்து படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சீமா தனது அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக இது குறித்து விடுதி கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விடுதி கண்காணிப்பாளர், சீமாவை மீட்டு சிகிச்சைக்காக பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சீமாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று உடலை தூக்கில் தொங்க விட்டனரா? என்று தெரியவில்லை. அது மர்மமாக உள்ளது. இது குறித்து சீமாவின் பெற்றோர் நவநகர் போலீசில் புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
