ஷாக்.. ஓட்டப்பயிற்சியின் போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

 
பசுபதி மாரி

தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கிச் சூடு ரேஞ்சில் ஓட்டப் பயிற்சியின் போது கான்ஸ்டபிள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் குலசேகரகோட்டை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகன் பசுபதி மாரி. இவருக்கும் மாரிச்செல்விக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பசுபதி மாரி தற்போது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் கமாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வல்லநாடு தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பசுபதி மாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டப் பயிற்சியின் போது காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி