அதிர்ச்சி... தோட்டத்து வீட்டில் தம்பதி வெட்டிக்கொலை!

 
கொலை

மத்தியபிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில் தம்பதியர் இருவரும் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் வெட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜாரா கிராமத்தை சேர்ந்த லால் ராம் குஷ்வாலா (40), அவரது மனைவி பிரபா குஷ்வாலா (35) ஆகியோர் சனிரா கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். அத்தோட்டத்தில் அமைந்துள்ள சிறிய வீட்டிலேயே இருவரும் தங்கி உறைந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத ஒருவர் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது உறங்கிக் கொண்டிருந்த தம்பதியரை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கி வெட்டியதாக போலீசார் தொடக்க கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர். தாக்குதல் மிகக் கொடூரமாக இருந்ததால், இருவரும் உடனடியாக ரத்தக் குளத்தில் உயிரிழந்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

காலை வேலைக்காரர்கள் தோட்டத்தை வந்த போது, கதவு திறந்திருந்ததும், வீட்டின் உள்ளே இருவரும் உயிரின்றி சடலமாக கிடந்ததும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கிராம மக்கள் மூலம் தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த சக நண்பர்கள்

கொலை செய்த பின் குற்றவாளி தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கைரேகைகள், காலடிச் சுவடுகள் உள்ளிட்ட ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. தம்பதிக்கு எதிராக பழிவாங்கும் நோக்கம் கொண்டவரா, அல்லது திருட்டு நோக்கில் வீட்டுக்குள் நுழைந்தவரா என்பதற்கான விசாரணை பல கோணங்களில் நடைபெற்று வருகிறது. குற்றவாளியை பிடிக்க சிறப்பு குழுவை அமைத்து தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?