ஷாக்.. மயக்க மருந்து கொடுத்து காதலி கூட்டு பலாத்காரம்.. காதலன் உட்பட 5பேர் மீது வழக்குப்பதிவு!
திருச்சி அருகே ஐடிஐ மாணவியை பலாத்காரம் செய்த காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவி தனது தாயுடன் நேற்று எஸ்பியிடம் புகார் அளித்தார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி. இவர், புள்ளம்பாடி விடுதியில் தங்கி, தனியார் ஐ.டி.ஐ.,யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமயபுரத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). கூலித் தொழிலாளியான இவர், மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம்.

அதேபோல், ஏப்ரல் 13ம் தேதி விடுமுறைக்கு வந்த சிலம்பரசன், மாணவியை தனது நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து மாணவியை சிலம்பரசன் மயக்கமடையச் செய்தார். அப்போது சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து மாணவியை மது குடித்து கும்பல் பலாத்காரம் செய்தனர். மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவைக் காட்டி, யாரிடமும் சொல்ல வேண்டாம். மீறினால் இணையதளத்தில் வெளியிடுவேன் என காதலன் சிலம்பரசன் மிரட்டியுள்ளார்.

எனினும், கடந்த மாதம் 31ஆம் திகதி மாணவியின் உடலில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அவரது தாயார் வினவிய போது, மாணவி நடந்ததை கூறியுள்ளார். 3 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சிலம்பரசன் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்தார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் சிலம்பரசனை கண்டித்தபோது, வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, மாணவி மற்றும் அவரது தாயார் நேற்று மாலை திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில், தன் மகளுக்கு நடந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும். 5 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
