அறுவை சிகிச்சையின் போது அதிர்ச்சி.. பெண்ணின் தலையில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்!

 
 ஹாபூர் அரசு மருத்துவமனை

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹபூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மருத்துவப் பிழை பெண் ஒருவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலையில் காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது ​​மருத்துவர் தவறுதலாக ஒரு ஊசியை தலையில் வைத்து தைத்து விட்டார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பெண் கடுமையான தலைவலியால் வீடு திரும்பினார். தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் தலைக்குள் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் ஊசி அகற்றப்பட்டது.

மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக பெண்ணின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web