அதிர்ச்சி... ரூ.4.35 கோடி மதிப்பிலான போலி புற்றுநோய் மருந்துகள் பறிமுதல்!

 
போலி மருந்து

நாட்டையே உலுக்கியெடுக்கும் சம்பவமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புற்றுநோய்க்கான  போலி மருந்து தயாரித்து புழக்கத்தில் விட்ட கும்பலை கைது செய்த போலீசார், அந்த கும்பலிடம் இருந்து சுமார் ரூ. 4.35 கோடி மதிப்புள்ள போலியான மருந்துகளை பறிமுதல் செய்தனர். 

Hyderabad: DCA seizes counterfeit anti-cancer drugs valued at Rs 4.35 crore-Telangana  Today

தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தில் உள்ள மச்சா பொல்லாரத்தில், புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மிகப்பெரிய போலி மருந்து தயாரிக்கும் கும்பலை தெலுங்கானா மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்துள்ளனர். மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் வி.பி. கமலஹாசன்  கூறுகையில் ஆஸ்ட்ரிகா ஹெல்த் கேர் என்ற நிறுவனம் போலி மற்றும் கலப்பட மருந்துகளை தயாரித்து சந்தையில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த டிச 2ம் தேதி மருந்து கட்டுப்பாட்டு துறையின் விஜிலென்ஸ் தனிப்படையினர் பல பகுதிகளில் சோதனை நடத்தினர். 

இந்தப் போலி மருந்துகளின் புழக்கம் தொடர்பான விலைப்பட்டியல் மூலம் தபால் துறை மூலம் அல்வாலில் உள்ள நிறுவனத்தின் முகவரியைத் தேடியபோது அது தவறான முகவரி என தெரியவந்தது.  பின்னர் சார்லப்பள்ளி, நாச்சரம் மற்றும் மேட்சல் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு கூரியர் அலுவலகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆஸ்ட்ரிகா ஹெல்த் கேர் மூலம் விநியோகிக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்யப்பட்டது. மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் மற்றொரு சிறப்பு விஜிலென்ஸ் குழு கீசராவில் உள்ள ஆஸ்ட்ரிகா ஹெல்த் கேர் நிறுவனத்தில் சோதனை நடத்தியது.  'ஆஸ்திரிகா ஹெல்த்கேர்' நிறுவனத்தில் இருந்து போலி மருந்துகளை டெலிவரி செய்யும் கூரியர் முகவர் மூலம் மச்சா பொல்லாரத்தில் மூன்று கிடங்குகளில் போலி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தத அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மாத்திரை மருந்து

டிசம்பர் 4-ம் தேதி இந்த போலி மருந்துகளின் தயாரிப்பு மையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பிலான 36 வகையான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளில் சில போலியானவை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆஸ்ட்ரா  ஹெல்த்கேர் இயக்குனர் கே.சதீஷ் ரெட்டி தலைமறைவாக உள்ளார்.  குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக டிஜி கமலஹாசன்  தெரிவித்தார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web