அதிர்ச்சி... கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை!
தங்கம் விலையை போல, காய்கறிகள், மளிகைப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் கிலோ ரூ.200யைத் தாண்டி விற்பனையானதைப் போல தற்போது பூண்டு விலை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பூண்டு, இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது. பனிக்காலத்தில் பூண்டு, வெங்காயத்தின் விலை ஏற்றம் காண்பது வழக்கம் தான் எனினும், தற்போது மழைக்காலம் முடிவுக்கு வந்து முன்பனிக் காலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பூண்டின் விலை உச்சம் தொட்டுள்ளது. சாதாரணமாக ஒரு கிலோ பூண்டின் விலை இந்த காலகட்டத்தில் கிலோ ரூ100 முதல் ரூ150 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் நடப்பாண்டை பொறுத்தவரை பூண்டின் விலை ரூ500 யைத் தொட்டுள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பொதுவாக பூண்டு உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.
நடப்பாண்டில் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் பூண்டு வரத்து சுமார் 70 சதவீதம் வரை குறைந்து இருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு இதே நிலை தான் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க