பெங்களூரில் அதிர்ச்சி... பெற்ற தாயை 4-வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற மகன்!

 
பெங்களூரு பெங்களூரு

இந்த செய்தியைக் கேட்டு  மொத்த பெங்களூருவும் அதிர்ச்சியில் உறைந்து தான் போனது. வரும் தலைமுறை பதைபதைக்க வைக்கிறோம். எல்லோரையும் இழந்து விட்டு, இவர்கள் யாருடன் சேர்ந்து வாழப் போகிறார்கள் என்கிற கவலை மிஞ்சி நிற்கிறது. 

பெங்களூரில் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பி.இ.எம்.எல் லேஅவுட் பகுதியில், 75 வயதான சாவித்திரம்மா என்பவரை அவரது சொந்த மகனான வெங்கடேஷே, வீட்டின் 4-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாகச் சாவித்திரம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ், தனது தாயாரைத் தூக்கிக் கொண்டு 4வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே தள்ளியுள்ளார்.  இதில் பலத்த காயமடைந்த சாவித்திரம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சாவித்தரம்மா ரத்த வெள்ளத்தில் கீழே இறந்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சிகரமானதாக இருந்தது.

"தன் தந்தை மறைந்த பிறகு தாயைப் பல ஆண்டுகளாக நல்லபடியாகக் கவனித்து வந்ததாகவும், ஆனால் தொடர் உடல்நலக் குறைவால் அவர் படும் அவதியைப் பார்க்க முடியாமலும், பராமரிக்க முடியாமல் ஏற்பட்ட விரக்தியாலும், பொருளாதார நெருக்கடியாலும் இந்த விபரீத முடிவை எடுத்ததாக" அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும், பெத்த தாயையே ஒரு மகன் கொலை செய்த இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை