பெங்களூருவில் அதிர்ச்சி... ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயற்சி!

 
சிசிடிவி

பெங்களூரு சதாசிவநகர் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற தம்பதியை மீது காரை ஏற்றி திட்டமிட்டு கொலை முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், 23 வயது கணினி பொறியாளர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சதாசிவநகர் அருகே வசிக்கும் வினீத் (33), அவரது மனைவி அங்கீதா பட்டீல் (31) மற்றும் மகன் ஆகியோர் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கீதா ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தார். நியூ பி.இ.எல். ரோட்டை கடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த ஒரு கார் வேகமாக வந்து ஸ்கூட்டரை பலத்ததாக மோதியது.

விபத்து

இந்த விபத்தில் தம்பதியரும் பலத்த காயமடைந்தனர். அவர்களது மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயமடைந்த வினீத், அங்கீதா இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர். எனினும் வினீத்தின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அங்கீதா சதாசிவநகர் போக்குவரத்து போலீசாருக்கு புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, கார் டிரைவர் நியூபி.இ.எல். ரோட்டில் ஸ்கூட்டரை நினைத்துப் பின்னே தொடர்ந்து மோதியதுடன், காரை மேலே ஏற்றி தம்பதியை கொல்ல முயன்றது போல தெளிவானுள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய பின் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று தப்பியும் விட்டார்.

க்ரைம்

இந்த ஆதாரங்களை உறுதி செய்த போலீசார், கொடிகேஹள்ளியை சேர்ந்த சுக்ருத் கவுடா (23) என்பவரை கைது செய்தனர். கணினி பொறியாளரான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. தம்பதியை கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?