சென்னையில் அதிர்ச்சி.. துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி அதிரடியாக கைது!
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி செங்குன்றம் பகுதியில் ஆபத்தான ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆவடி அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் உடனடியாக செங்குன்றம் பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு தனது கூட்டாளியுடன் பதுங்கி இருந்து சரித்திர பதிவேடு குற்றவாளி சேதுபதியை போலீசார் கைது செய்தனர். போலீஸாரின் வருகையை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களைப் பயன்படுத்தி தப்பியோட முயன்றபோது, துப்பாக்கி முனையில் சேதுபதியை போலீஸார் கைது செய்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சேதுபதியிடம் இருந்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சேதுபதியை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
