கோவையில் அதிர்ச்சி... பள்ளி மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லை!

 
கோவையில் அதிர்ச்சி... பள்ளி மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லை!

கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் சவுந்தர்யா என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆண்களைப் போல சட்டை போட்டுக் கொண்டு கிராப் வெட்டி படுஸ்டைலாக புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் சவுந்தர்யா பதிவேற்றியிருக்கும் படங்கள் வைரலாகி வருகிறது. இவர் 13 வயது மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

கோவையில் அதிர்ச்சி... பள்ளி மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லை!

சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்த சவுந்தர்யா, 9ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே அழைத்து சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு ஆசிரியை சவுந்தர்யா திடீரென பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார். 

உடனடியாக இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை சவுந்தர்யா மீது புகார் அளித்தனர்.

கோவையில் அதிர்ச்சி... பள்ளி மாணவிக்கு ஆசிரியை பாலியல் தொல்லை!

இந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை சவுந்தர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். மாணவிக்கு, ஆசிரியையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web