டெல்லியில் அதிர்ச்சி... 4 மகள்களையும் கொன்று தந்தை தற்கொலை... 5 பேரின் சடலங்கள் மீட்பு!

 
தற்கொலை

டெல்லியில் தனது 4 மகள்களையும் கொலைச் செய்து விட்டு தந்தையும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். மகள் அத்தனைப் பேரும் 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் யாரையும் வீட்டில் இருந்து வெளியே பார்க்கவில்லை என்றும் பக்கத்து வீட்டுக்காரர் கூறியிருந்தார். அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், ஈக்கள் அந்த வீட்டைச் சுற்றி வந்ததில், சந்தேகப்பட்டு அருகில் இருந்தவர் ஹவுஸ் ஓனருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வசந்த் குஞ்சின் ரங்புரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த கட்டிடத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து தகவல் வந்ததாக போலீசார் கூறினர். அவர் கதவைத் தட்டியும் அவர்கள் அதைத் திறக்கவில்லை என்றும், அவர்கள் கடைசியாக செப்டம்பர் 24ம் தேதியன்று  வெளியே வந்ததாகவும் குடியிருப்பாளர் கூறினார்.


புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூடியிருந்த கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது 5 பேரும் சடலமாக இருந்த நிலையில், அவர்களது உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், அந்த குடியிருப்பில் இருந்து மூன்று விஷப் பொட்டலங்கள், கண்ணாடிகள் மற்றும் ஒரு ஸ்பூன் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தச்சராக பணிபுரிந்து வந்த ஹீரலால் ஷர்மா (46), அவரது மகள்கள் நீது (26), நிக்கி(24), நீரு(23), மற்றும் நிதி(20) ஆகியோர் உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரு மகள்கள் மாற்றுத்திறனாளிகள் என போலீசார் தெரிவித்தனர்.

 ஹீரலால் ஷர்மா

கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டு, தீயணைப்புப் படையின் உதவியுடன் காவல்துறையினரால் கதவு திறக்கப்பட்டது. அவர்களது குடியிருப்பில் இரண்டு அறைகள் உள்ளன. முதல் அறையில் ஹீரலால் ஷர்மா சடலமாக கிடந்தார். மற்றொரு அறையில் நான்கு பெண்கள் இறந்து கிடந்தனர். என்று போலீசார் தெரிவித்தனர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்தது தெரியவந்தது. இதில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது தந்தை தனது 4 மகள்களையும் கொலைச் செய்து விட்டு தற்கொலைச் செய்து கொண்டாரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர் மேலதிக விபரங்கள் தெரிய வரும். கடைசியாக கடந்த செப்.24ம் தேதி தந்தை ஸ்வீட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைவது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவாகி உள்ளது.அதன் பின்னர் அவர்கள் யாரையும் அந்த குடியிருப்பு வாசிகள் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web