மதுரையில் அதிர்ச்சி... பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல்!

 
மாணவி கடத்தல் காணவில்லை

மதுரையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 13 வயது சிறுமியை, வகுப்புத் தோழியின் தந்தையே கர்ப்பமாக்கிய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி, மாணவியை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

மதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (23). இவர் பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இதை வைத்து அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

கேரள மாணவி பலி

இதனால் அந்த மாணவி, வீட்டில் மிகுந்த சோகத்துடனும், யாருடனும் சரிவர பேசாமல் எப்போதும் சோர்வுடனும் இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் மாணவியிடம் தீவிரமாக விசாரித்த போது, நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். 

மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?