தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... தெருநாய் கடித்ததில் 17 வயது மாணவன் உயிரிழப்பு!

 
நாய்

மக்களே... அஜாக்கிரதையாக இருக்காதீங்க. அது வளர்ப்பு நாயாக இருந்தாலும், பூனையாக இருந்தாலும், தெருநாயாக இருந்தாலும் தடுப்பூசி போடுவது உயிர் காக்கும். நாய் கடிக்கவில்லை.. உடலில் அதன் பற்கள் பதியவில்லை என்று அலட்சியமாக இருக்காதீங்க. சமீப காலங்களாக தமிழகத்தில் நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாயின் எச்சில் உடலில் பட்டாலே தடுப்பூசி அவசியம் என்று தெரிஞ்சுக்கோங்க.

காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை என்று தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் தங்கள் அரசின் சாதனையாக முழு பக்கத்தில் அரசு செலவில் விளம்பரம் கொடுக்கும் திமுக அரசு, நாய்க்கடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தவறி விட்டது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவ பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறுதி அஞ்சலி செலுத்த வந்த 25க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபிரகாஷை தெருநாய் ஒன்று துரத்தி கடித்துள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு உடல்நில பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜபிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த 25-க்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?