திருச்சியில் அதிர்ச்சி... ‘உனக்கு கணக்கு வரலை...’ வீட்டிற்கு அழைத்து மாணவனுக்கு பாலியல் தொல்லை!

 
சிறுமிக்கு பாலியல் பலாத்காரம்

திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில், சரியாக கணக்குப் பாடம் படிக்க வரவில்லை என்று கூறி, மாணவனை கட்டாயமாக வீட்டிற்கு டியூசன் வரச் சொன்ன கணித ஆசிரியர், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கருமண்டபம் ராம்நகரைச் சேர்ந்தவர் ஐன்ஸ்விங் பாலா (55). திருச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கணக்குப் பாடம் வரவில்லை என்று திட்டியுள்ளார். 

சிறுவன் க்ரைம் பலாத்காரம் பாலியல்

அதன் பின்னர், வலுக்கட்டாயமாக அந்த மாணவரை தனது வீட்டிற்கு, கணக்கு பாடம் டியூசன் படிக்க வருமாறு அழைத்துள்ளார். அந்த மாணவரும், ஆசிரியர் வீட்டுக்கு டியூசனுக்கு சென்ற நிலையில், மாணவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழுவினர், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

Cantonment Womens PS

புகாரின் பேரில் கணித ஆசிரியர் ஐன்ஸ்விங் பாலா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web