அதிர்ச்சி... கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு... காப்பீட்டு தொகைக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்!

 
5வது திருமணம்

ஜார்க்கண்ட் மாநிலம், ஹஜாரிபாக் மாவட்டத்தில், காப்பீட்டு தொகை பெறும் நோக்கில் தனது மனைவியை கொலை செய்து, சாலை விபத்தாக சித்தரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

ஹஜாரிபாக் மாவட்டம் பதாமா-இட்கோரி தேசிய நெடுஞ்சாலையில் தம்பதியர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக நேற்று முன் தினம் தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று முகேஷ் குமார் மேத்தா (30) மற்றும் அவரது மனைவி செவந்தி குமாரி (23) ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் செவந்தி இறந்து விட்டதாக உறுதிப்படுத்தினர். முகேஷ் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றார். ஆனால் செவந்தியின் இறுதிச்சடங்கின் போது முகேஷின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியதால், உள்ளூர்வாசிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பின்னர் போலீசாரின் விசாரணையில், ரூ.30 லட்சம் விபத்துக் காப்பீட்டு தொகையைப் பெறும் நோக்கில் தனது மனைவியை ஹெல்மெட்டால் தலையில் அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து முகேஷ் கொன்றது தெரிய வந்தது. மனைவியைக் கொன்ற பின்னர், தன்னைத் தானே காயப்படுத்தி விபத்துப் போல நாடகமாடியதும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

திருமணம்

இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முகேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?