அதிர்ச்சி... பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டவர் கொலை!

 
கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பட்டாசு வெடித்ததைக் தட்டிக் கேட்டவரைக் கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த செம்மேடு கிராமத்தில், வேலு(24) என்பவர் தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடித்துள்ளார். அப்போது பட்டாசு பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. இதில் சூரியமூர்த்தி என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து ஓடியுள்ளது. 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

இதையடுத்து வேலுவிடம் பட்டாசுகளை சற்றுத் தள்ளி வெடிக்கச் செய்யலாமே என சூரியமூர்த்தி கேள்வி எழுப்பியதால், வேலு தரப்புக்கும் சூரியமூர்த்தி தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரியமூர்த்தி மகன் பார்த்தீபனும்(26) பட்டாசு வெடித்ததைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்பேது வேலு மற்றும் அவரது உறவினர் ராமர்(30) என்பவரும் சேர்ந்து பார்த்தீபனை கத்தியால் தாக்கியதில் அவர் பலத்தக் காயமைடந்துள்ளார். இதையடுத்து அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

இச்சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.தகவல் அறிந்த கடலூர் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன், ராஜா மற்றும் போலீஸார் வழக்கில் சம்பந்தப்பட்ட வேலு என்பவர் நேற்று செம்மேடு பாலம் அருகில் பதுங்கி இருந்தவரை மடக்கி பிடிக்க முயன்றபோது, பாலத்தின் மேலிருந்து கீழே குதித்ததில் வலது காலில் பலத்தக் காயமடைந்துள்ளார். அவரைப் பிடித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய ராமர் என்பவரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!