திருமணமான 4வது நாளிலேயே அதிர்ச்சி... அக்கா கணவருடன் ஓடிய புதுப்பெண்!
திருமணமான நான்காவது நாளிலேயே புதுப்பெண் காணாமல் போன சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் தனது அக்கா கணவருடன் ஓடியது வெளிச்சமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த சந்திரன் (பெயர் மாற்றப்பட்டது, 40) என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். தற்போது அவரது மனைவி ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில், சந்திரனின் மனைவியின் தங்கை (32)க்கு சமீபத்தில் உறவினர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணம் நீலாம்பூரிலுள்ள கோவிலில் நடந்தது.

ஆனால், திருமணம் நடந்த நான்காவது நாளிலேயே அந்த புதுப்பெண் திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மணமகன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, புதுப்பெண்ணின் அக்கா கணவரான சந்திரனும் வீட்டில் இருந்து காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரின் செல்போன் டவர் இடங்களை சரிபார்த்தனர். அதில், அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது உறுதியாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், புதுப்பெண் திருமணத்திற்கு முன்பே தனது அக்கா கணவரான சந்திரனுடன் நெருக்கமான பழக்கம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த உறவை மறைக்கவே சந்திரனின் மனைவி அவசரமாக தங்கைக்கு திருமணம் செய்து வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால், புதுப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு மனமின்றி சென்று சில நாள்களிலேயே சந்திரனை நினைத்து அவசரமாக வீட்டை விட்டு ஓடியதாகவும், சந்திரனும் அதற்கு துணை நின்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருவரும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
