அதிர்ச்சி... தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த துயரச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் – சந்தான லட்சுமி தம்பதியருக்கு ஒன்றரை வயது மகன் தனுஷ் இருந்தார். அருகில் வசிக்கும் உறவினர் அலமேலு உடல்நிலை பாதிப்பால் இருந்ததால், அவரை பார்க்க சந்தான லட்சுமி குழந்தையுடன் அவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு இருந்தபோது, கவன சிதறலின் காரணமாக தனுஷ் குளியலறையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த சந்தான லட்சுமி குழந்தையை வெளியே எடுத்து உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
தொடர்ந்து, குழந்தை ஆபத்தான நிலையில் கிரீம்ஸ் ரோட்டிலுள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முயற்சிகள் பலனளிக்காமல் தனுஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
