அதிர்ச்சி... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சிலைகள், கொடி மரங்கள் திருட்டு!

 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

தமிழகம் முழுவதுமே திருட்டு, அடாவடி, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் என்று குற்ற செயல்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் பல கோயில்களில் சிலைகளைக் காணவில்லை என்று சிலைக் கடத்தல் தடுப்பு போலீசார் விசாரித்து வரும் நிலையில், இருக்கும் சிலைகளைப் பாதுகாக்க, பாதுகாப்பை  பலப்படுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நீண்ட காலங்களாகவே பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிலைகள், கொடி மரங்களை கடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சின்னத்தில் இந்தக் கோவில் கோபுரமே அமைந்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

அந்த புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாசலில் 2 யானை சிலைகள் இருந்தன. அழகான இந்த கற்சிலைகளை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காணவில்லை. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது புதிய கொடி மரங்கள் அமைக்கப்பட்டன.

ஆண்டாள் கோவிலில் உள்ள 3 கொடி மரங்களும் புதிதாக அமைக்கப்பட்டு, பழைய கொடிமரங்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. மற்ற 2 கொடி மரங்கள் மாயமாகி உள்ளன. எனவே யானை கற்சிலைகள் மற்றும் கொடி மரங்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை கண்டுபிடித்து தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் கோவில்

இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அண்மையில் காணாமல் போன 2 கொடி மரங்கள் குறித்து விசாரித்தபோது கோயில் வெள்ளை அடிப்பு பணிக்காக ரமேஷ் என்ற நபர் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகிய இருவரும் லாரி மூலம் கொடி மரங்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் கடத்தப்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web