அதிர்ச்சி... மாநில ஹாக்கி வீரர் சாலை விபத்தில் மரணம்!

 
சுஃபியான், மீனாட்சி
கேரள மாநிலம், கொச்சியில் நடந்த சாலை விபத்தில், மாநில ஹாக்கி வீரரும், அவருடைய மைத்துனியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்தனர். 

கொச்சியில் மாநில ஹாக்கி வீரரும், அவரது மைத்துனரும் மகளின் பெயர் சூட்டும் விழாவிற்கு அலங்காரப் பொருட்களை வாங்கச் சென்றபோது, ​​பைக் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து

இந்த விபத்தில் கேரள மாநிலம் காசர்கோடு திருக்கரிப்பூர் உதினூர் பாத்திமா மன்சிலைச் சேர்ந்த சுஃபியான் (22), தேவார கோயிதாரா காலனி ஆனாம்துருத் வீட்டைச் சேர்ந்த மீனாட்சி (20) ஆகியோர் உயிரிழந்தனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை லூர்து தேவாலயம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. ​வேகமாக வந்துக் கொண்டிருந்த இவர்களது பைக், தேவாலயம் அருகே உள்ள வளைவில் இருந்த கம்பத்தில் மோதி, உணவகங்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த நிலையில் இருவரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். 

விபத்து

கொச்சியில் உள்ள ஒரு ஜூஸ் கடை ஒன்றில் பணிபுரிந்த சுஃபியன் அங்கு மீனாட்சியின் சகோதரி மாளவிகாவை சந்தித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஓராண்டுக்கு முன் திருமணமாகி தேவாரத்தில் உள்ள மாளவிகா வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். விபத்தில் உயிரிழந்த சுஃபியன் மைத்துனி மீனாட்சி தனியார் கல்லூரியில் மருந்தியல் படித்து வந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web