அதிர்ச்சி... 38 பேரை கடித்த தெருநாய்... ரேபிஸ் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதி!
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 38 பேரைக் கடித்த தெருநாய்க்கு வெறிநாய்க்கடி நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பேட்டை கால்நடை மருத்துவ மனையில் கண்காணிப்பில் இருந்த நாய் நேற்று உயிரிழந்தது. பாலோடில் உள்ள மாநில விலங்கு நோய் நிறுவனத்தில் பிரேதப் பரிசோதனை
செய்யப்பட்டதில் உயிரிழந்த தெருநாய்க்கு வெறிநாய்க்கடி நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் நாய் புதைக்கப்பட்டது.
இதுவரை அந்த தெருநாய் 38 பேரைக் கடித்துள்ளது. நேமம் பகுதியில் அதிகமானோரை கடித்துள்ளது. ஆயுர்வேத கல்லூரிக்கு அருகாமையிலும், கைமனம், சிரமுக்கு, கரமனை பகுதிகளிலும் நாய்க்கடிக்குள்ளானவர்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். நாய் கடித்தாலோ, நாயின் நகம் பட்டாலோ, சிறிய அளவில் கீறல் விழுந்தாலோ உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என நகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த தெருநாய்க்கு வெறிநாய்க்கடி நோய் உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாய்க்கடிக்கு உள்ளான பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று நடைபெறுகிறது. அந்த பகுதியில் உள்ள நாய்களுக்கு ரேபிஸ் பரவாமல் தடுக்க, அப்பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் ரிங் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் நடைபெறுகிறது.
நேமம், பாப்பனம்கோடு, ஆட்டுக்கல், ஆயுர்வேத கல்லூரி அருகே, கைமனம், சிரமுக்கு, கரமனை, வஞ்சியூர் பகுதிகளிலும் இன்று முதல் ரிங் தடுப்பூசி போடப்படுகிறது. நாய் நல அமைப்பான காவா தலைமையில் தடுப்பூசி போடப்படுகிறது. 'கவா' அமைப்புடன் இணைந்து 52 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ள 48 வார்டுகளில் தடுப்பூசி போடும் பணியை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது.
38 பேரை இரண்டு தெருநாய்கள் கடித்ததாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், நகராட்சி ஊழியர்களால் 2வது நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நாயும் இறந்து விட்டதாக நகராட்சி அதிகாரிகள் கருதுகின்றனர். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டால் அதிகபட்சமாக அடுத்த 4 நாட்களில் நாய் உயிரிழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!