அதிர்ச்சி... பஸ்ல மாணவியிடம் சில்மிஷம்... சீனியர் மாணவர்களை துரத்தி துரத்தி அடித்து வெளுத்த ஜூனியர் மாணவர்கள்!

 
மாணவர்கள் சண்டை

தங்களது தோழியான மாணவியிடம் பேருந்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வாய்தகராறு வளர்த்ததால், சீனியர் மாணவர்களை வெளுத்து வாங்கினார்கள் ஜூனியர் மாணவர்கள். கல்லூரி பேருந்துக்குள் நிகழ்ந்த சண்டை கலவரமானதால்  திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினத்தில் தனியார் கலைக் கல்லூரி மாணவர்களிடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த  சீனியர் மாணவர் ஒருவர், ஜூனியர் மாணவியிடம் சில்மிஷம் செய்து, வாய் தகராறு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் திருவாரூர் வள வாய்க்கால் பகுதியில் இரு தரப்பினரும் பேருந்தில் இருந்து இறங்கும் போது சீனியர் மாணவர் மற்றும் அவரது சகோதரரை ஜூனியர் மாணவர்கள் தாக்கினர். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், படுகாயமடைந்த மூத்த மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி பேராசிரியர்கள் மீது மாணவர்கள் மோதிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web