அதிர்ச்சி.. பிராங்க் செய்த இளம்பெண் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து பலி.. வீடியோ வைரல்!

 
 நாகினா தேவி

மும்பை அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள டோம்பிவலியில் உள்ள குளோப் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நாகினா தேவி மஞ்சிரம் கட்டிடத்தில் இருந்து விழுந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது.


மணப்படா போலீசார் விபத்து மரண அறிக்கை (ஏடிஆர்) பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின்படி, நகினா தேவி நேற்று கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​பிராங்க் செய்வதாக கட்டிடத்தின் மீது ஏறி ​தவறி விழுந்துள்ளார். இதில் அவரது நண்பர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த பரபரப்பு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web