அதிர்ச்சி... லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம்!
சேலம் அருகே மல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், பேரன் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மல்லூர் திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சென்னன். விவசாயியான இவர் தனது மகளையும், பேரனையும் சமயபுரம் கோயிலுக்கு அழைத்து செல்வதற்காக புறப்பட்ட நிலையில், தனது பைக்கை ஸ்டாண்டில் விடுவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்று இவர்கள் சென்றுக் கொண்டிருந்த பைக் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷன் ஆகிய மூன்று பேரும் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்த மல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி ஓட்டுனரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!