அதிர்ச்சி.. பெண் காவலருக்கு கொலை மிரட்டல்.. பிரபல ரவுடி அதிரடியாக கைது!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவர் மீது கொலை, கடத்தல், கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் பிரியங்கா இன்று காலை இவரது வீட்டுக்குச் சென்று, சரித்திர பதிவுக் ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்றார்.
அப்போது, விசாரணைக்கு வந்த பெண் உதவி ஆய்வாளர் பிரியங்காவை பிரபல ரவுடி அறிவழகன் மற்றும் அவரது ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றனர். பெண் உதவி ஆய்வாளர் பிரியங்கா அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் காவல் நிலையத்தில் ரவுடி அறிவழகன், ஜோதி என்கிற பார்த்திபன் உள்ளிட்ட 2 பேர் மீது கொலைமிரட்டல், அரசு வேலை செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் நகர போலீஸார், அறிவழகன், ஜோதி என்கிற பார்த்திபன் உள்ளிட்ட இருவரை கைது செய்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விழுப்புரத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா