அதிர்ச்சி... வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 10 பவுன் தாலி சங்கிலி பறிப்பு!

 
நகை கொள்ளை
 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், வழிப்பறி சம்பவங்களும், கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களும் தமிழகத்தில் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாம்பரம் அருகே வெங்கம்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து 10 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நகை

வீட்டிலிருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கத்தையும், 100 கிராம் வெள்ளிப் பொருட்களையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி வெங்கம்பாக்கம் ஜெயராம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் சிவசங்கர் (32). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவி துர்கா. இருவரும் நேற்றிரவு 11 மணிக்குப் பிறகு வீட்டில் உறங்கச் சென்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கொள்ளையர்கள் சிவசங்கர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து ஹாலில் இருந்த 100 கிராம் வெள்ளிப் பொருட்களையும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு, பின்னர் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த துர்காதேவியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி சரடையும் அறுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

போலீஸ்

இதையடுத்து பதறி எழுந்த துர்கா தேவி கூச்சல் போட்டுள்ளார். துர்கா தேவியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிவசங்கரன் எழுந்து ஓடிவந்துள்ளார். ஆனால், அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக பீர்க்கங்காரணை போலீசில் சிவசங்கரன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web