போலீஸ் எஸ்.ஐ., மற்றும் ஏட்டை அரிவாளால் வெட்ட முயன்ற அதிர்ச்சி... நெல்லையில் பரபரப்பு!

 
அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு கருணைராஜ், காவலர் குருமகேஷ் ஆகியோர் நேற்று பொன்னாக்குடி பஜார் அருகே ரோந்துப் பணியில் இருந்தனர்.

அரிவாள் வெட்டு

அப்போது இருவர் பைக் அருகே கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். அவர்களிடம் விசாரிக்க முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த இருவரும் திடீரென எஸ்ஐ கார்த்திகேயனின் கழுத்தில் அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. கார்த்திகேயன் விரைவாக விலகி உயிர் தப்பினார்.

கைது

அதே போல் ஏட்டு கருணைராஜும் தாக்குதலில் இருந்து தப்பியதாகத் தெரிய வந்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு, இருவரும் பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இது குறித்து எஸ்ஐ கார்த்திகேயன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வான் மகேஷ் (25), உத்தமபாண்டியன்குளத்தைச் சேர்ந்த சூர்யா (20) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?