அதிகாலையில் அதிர்ச்சி... நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை!

 
லாரா

நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. முண்ணனி கதாநாயகர் படங்களை காட்டிலும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு  உட்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்தவர்  நடிகர்  விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2  உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி 2006ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். விஜய் ஆண்டனி, பாத்திமா தம்பதிக்கு மீரா, லாரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள்  மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

லாரா

 இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்  விஜய் ஆண்டனி. இவருடைய மூத்த மகள் மீரா சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர்  மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர செய்துள்ளது. 

லாரா

 

சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள அவரது  வீட்டில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்   கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று  சீக்கிரமாகவே உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணிக்கு  அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் ஆண்டனி  பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மீராவை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அத்துடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு   காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை