பகீர் வீடியோ... 20 அடி உயரத்திலிருந்து டேங்கர் லாரி மீது தலைகுப்புற விழுந்த லாரி!

 
விபத்து

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டெல்லி - அஜ்மீர் விரைவுச்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில், நிவாரு சாலை அருகே சென்றுக் கொண்டிருந்த டிரக் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையின் டிவைடரை உடைத்துக் கொண்டு, மறுபுறம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி மீது சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்தது. 

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு மக்களும், வாகன ஓட்டிகளும் அலறியடித்து பீதியில் உறைந்தனர். இந்த திடீர் சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அந்த பகுதியில் இருந்த யாருக்கும் ஒன்றும் புரிவதற்கு முன்பாகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து லாரி ஓட்டுநர் தப்பித்து சென்றார். 

இந்த கொடூர விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரியின் ஓட்டுநர் காயமடைந்தார்.  இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

விபத்து

அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்த டேங்கர் லாரி ஓட்டுநரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலின்படி, டெல்லி-அஜ்மீர் எக்ஸ்பிரஸ்வே கல்வெர்ட்டில் காலி டிரக் ஒன்று அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிக வேகம் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சர்வீஸ் சாலையில் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது விழுந்தது தெரிய வந்துள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிரேன் மூலம் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web