அதிர்ச்சி சிசிடிவி வீடியோ: பெண்கள் விடுதியில் இருந்து 17 வயது பெண்ணைக் கடத்திச் செல்லும் முகமூடி கும்பல்!

 
கடத்தல்
 

 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் இருந்து 17 வயதுடைய பெண் ஒருவரை முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த கடத்தல் சம்பவம் சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை அளித்துள்ளன. அந்ஹ்ட வீடியோவில் தூங்கிக் கொண்டிருந்த பெண் காவலர், மேலும் மூன்று காவலர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி முன்னிலையில், விடுதியில் இருந்து பெண்ணைக் கடத்திச் சென்ற சம்பவம் வெறும் 20 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது வீடியோவில் பதிவாகி உள்ளது.


இந்த சம்பவம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணியளவில் கம்பூவில் அமைந்துள்ள நடந்துள்ளது. வளாகத்தின் பின்புறம் உள்ள 4 அடி உயர சுவரில் இருந்து குதித்து பெண்கள் விடுதியின் உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் 6 பேர், ஒரு குச்சியைப் பயன்படுத்தி, காவலர் அறையில் இருந்து ஜன்னல் வழியாக சாவியை எடுத்து, கதவைத் திறக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் பெண்ணை அழைத்து, அவளை எழுப்பி, தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகமூடி அணிந்து விடுதிக்குள் நுழைந்தவர்களில் ஒருவரின் கையை அந்த சிறுமி இறுக்கமாகி பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இதன் போது பணியில் இருந்த பெண் காவலர் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
பிரதான வாயிலில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மொத்தம் மூன்று பாதுகாப்பு காவலர்கள் இருந்தனர், ஆனால் உள்ளே நடந்த சம்பவம் எதுவும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.


இது குறித்து காவலர்கள் கூறுகையில், தனது வீட்டில் இருந்து அந்த சிறுமி இதற்கு முன்பு இரண்டு முறை தப்பித்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் சிறுமியின் காதலனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடத்தல்காரர்களுக்கு இருப்பிடம் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்திருந்ததால், முழு சம்பவமும் திட்டமிடப்பட்டதாக போலீசார் நம்புகிறார்கள். கடந்த காலங்களில், தத்திபூர் பகுதியில் இருந்து சிறுமி காணாமல் போனதால், அவரது காதலன் மீது காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ்
சிறுமியை போலீசார் கடந்த ஜூன் 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் பெற்றோருடன் செல்ல மறுத்து விட்ட நிலையில், இன்னும் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடையாததால் நீதிமன்றம் அவளை பெண்கள் வீடுதிக்கு அனுப்பி வைத்தது. சிறுமி ஏற்கெனவே வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றதால், அவள் மூன்றாவது அறையில் தங்க வைக்கப்பட்டாள். அது உள்அறை. இந்த கடத்தல் சம்பவத்தில், ​​சிறுமிகள் இல்லத்தில் இருப்பவர்கள் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web