பெரும் சோகம்... சட்லஜ் நதி ஓரத்தில் உடல் பாகங்கள்... டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைப்பு!

 
வெற்றி துரைசாமி

பெரும் சோகமாக... காணாமல் போன முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியைத் தேடி மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், சட்லஜ் நதி ஓரத்தில், மனித மூளை உள்ளிட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள், வெற்றியின் உடல் பாகங்களா என டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்திற்கு படப்பிடிப்புக்கான லோகேஷன் பார்க்க  சென்றிருந்த நிலையில், இவர்கள் சென்ற இன்னோவா காரின் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறிய கார், சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியானது. 

வெற்றி துரைசாமி

இந்த விபத்தில் காரை இயக்கிய ஓட்டுநர் செந்தில் சடலமாக காருக்குள் இருந்து மீட்கப்பட்டார்.  அவருடன் பயணம் செய்த நண்பன் கோபிநாத், பாறைகளில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைசப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைதை துரைசாமி

ஆற்றில் விழுந்த  வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடும்பனி காரணமாக தேடுதல் பணி தொய்வடைந்தது. சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில்  மீட்பு படையினர் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சட்லஜ் ஆற்றில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன வெற்றியின் உடல் பாகங்களா என டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web