அதிர்ச்சி வீடியோ... பெரும் சோகம்... மகன் பிறந்தநாள் விழா மேடையிலேயே தாய் மாரடைப்பால் மரணம்!

 
பிறந்தநாள் விழா, யாமினி

மகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது, விழா மேடையிலேயே தாய் சுருண்டு விழுந்து மாரடைப்பால் மரணமடைந்த சமவம் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

பிறந்தநாள் விழாவிற்கு வாழ்த்த வந்திருந்தவர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்த பதற வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வரப்படுகிறது. 

வல்சாத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று தனது 5வது பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் கௌரிக், தனது தாயார் யாமினியுடனும், தந்தையுடன் மேடையில் குதூகலமாக காணப்படுகிறார். அப்போது திடீரென மேடையில் இருந்த சிறுவனின் தாயார் யாமினிபென் மயங்கி சரிந்து கீழே விழுகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் பதறியடித்தப்படியே அவருக்கு முதலுதவி செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் யாமினியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

பிறந்தநாள் விழா, யாமினி

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் டிஜேயின் இசைக்கு நடனமாடுவது பதிவாகி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தாயார் யாமினிபென் மற்றும் அவரது தந்தை ஆகியோர் மேடையில் மகிழ்ச்சியுடன் இருந்தனர். திடீரென்று, யாமினிபென் தனது கணவரின் தோளில் தலை சாய்த்து மேடையில் சரிந்து விழுகிறார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபமாக நாடு முழுவதுமே நடுத்தர வயதுடைய ஆண்கள், பெண்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், மாரடைப்பு மரணங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை