அதிர்ச்சி வீடியோ... சாம்பலான 1,000 வீடுகள்... காட்டுத் தீயில் உடல் கருகி பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு!
அமெரிக்காவின் சிலி பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் 51 பேர் உடல் கருதி உயிரிழந்த நிலையில், பலர் படுமோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையையும் சேர்த்து, இந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்திருக்கிறது.
மனிதனுக்கு எண்ணிலடங்கா ஆச்சர்யங்களையும், அவஸ்தைகளையும் தனக்குள்ளே ஒளித்து வைத்து, ஒவ்வொரு முறையும் மனிதனை இயற்கை எச்சரித்து வருகிறது. இது ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. அப்படி, அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் அந்த பகுதி முழுக்கவே பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் தீக்கிரையாகி இது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
Heartbreaking scenes in #Chile as forest fires take lives and homes in #VinadelMar and #Valparaiso.#ChileFires #earthquake pic.twitter.com/PAq5u2ABDQ
— Nouman Chandio (@Muhamma29490042) February 4, 2024
தீ பரவாமல் இருக்க விமானம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் மேலும் பலரும் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் தீவிபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த தீயினால் காடு அழிந்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. சிலி காட்டுத்தீயில் இருந்து அடர்த்தியான சாம்பல் புகை கடலோர நகரங்களை மூடியது. மத்திய பகுதிகளான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தினர் என்று வால்பரைசோவின் மாநில பிரதிநிதி தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் இருந்த 1,000 வீடுகளும் தீக்கிரையாகி, எலும்பு கூடுகளாய் காட்சியளித்தது. இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க