அதிர்ச்சி வீடியோ.... இறந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற தாய்.. தொடரும் அவலங்கள்!!

 
ராஜு

விஞ்ஞான யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நாடு நிலவுக்கும், சூரியனுக்கும் ராக்கெட் அனுப்பி சாதனை படைத்து வருகிறது. அதே நேரத்தில் மனித நேயம் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அசம்பாவிதமோ , ஆபத்தோ எது நடந்தாலும் அதை புகைப்படங்கள், வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் வியாபாரமாக்கவே இன்றைய தலைமுறை யோசிக்கிறது. மனித நேயத்துடன் தேவைப்படும் உதவிகளை அந்த நேரத்தில் செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் விட்டு விலகி வருகிறது. இதே போல் தொடர் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. இவர்  நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும்  ராஜூவின் தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜூ உடலை பார்த்து கதறி அழுதனர்.பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர்.


ஆனால் பல மணி நேரமாக கேட்டு பார்த்தும் உடலை எடுத்து செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. இதனால் ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் நடந்தே சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்நிலையில் வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த தாய் மகன் இருவரும் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உதவிக்காக அருகே உள்ள காவல் நிலையத்தை நாடினர். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அமித்குமார் மாலிக் நிதி உதவி செய்ததோடு மேலும் சிலரிடமும் நிதி திரட்டி இறந்த ராஜூ உடலை இறுதி சடங்கு செய்ய உதவினார்.

ராஜு

 அதன் பிறகு தான்  இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.இதற்கிடையே வாலிபர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவக் கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web