மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு... 4 பேர் பலி!
அமெரிக்காவில் மெக்சிகன் மாகாணம் கினிசி நகரின் அருகே கிராண்ட் பிளாங் டவுன்ஷிப் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று காலை 11 மணிக்கு அந்நாட்டு நேரப்படி பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழிபாட்டு தலத்திற்கு 40 வயது நிரம்பிய தாமஸ் ஜாக்கப் சன்போர்ட் என்ற நபர் காரில் வந்தார். காரில் இருந்து இறங்கிய தாமஸ் தான் வைத்திருந்த 2 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு மத வழிபாட்டு தலத்திற்கு சென்றிருந்தார். அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். மேலும் , மத வழிபாட்டு தலத்திற்கு தீ வைத்தார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, போலீசாரை நோக்கி தாமஸ் சுட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் தாமஸ் கொல்லப்பட்டார். படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
