ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரென்ஷா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து சிறப்பாக ஆடி வெற்றியை பெற்றுத் தந்தனர். 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்த இந்தியா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடன், விராட் கோலி 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
இதே ஆட்டத்தில், பீல்டிங் செய்யும் போது அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக பிடித்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து இடது விலா எலும்பில் காயமடைந்தார். கடும் வலியால் அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவரது உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
