மருத்துவமனையிலிருந்து ஸ்ரேயஸ் ஐயர் டிஸ்சார்ஜ்!

 
ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தற்போது உடல் நலம் மீண்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா–ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது. அதில் பீல்டிங் செய்தபோது ஸ்ரேயஸ் ஐயர் திடீரென பந்தை தடுக்க முயன்றபோது மண்ணீரல் பகுதியில் கடுமையான தாக்கம் ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் அவரை மைதானத்திலிருந்து எடுத்துச் சென்று அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஸ்ரேயாஸ் ஐயர்

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், மண்ணீரலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரின் உடல் நலம் தற்போது தேறி வருவதால், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளேன்! ஷ்ரேயாஸ் ஐயர் ட்வீட்!

ஸ்ரேயஸ் ஐயர் தற்போது மருத்துவர்களின் பரிந்துரையின்படி ஓய்வில் உள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?