மீண்டும் படமாகுது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை! கல்லா கட்ட தயாராகும் தயாரிப்பாளர்கள்!

 
சில்க் ஸ்மிதா

தி தர்ட்டி பிக்சர்ஸ் என நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை கதையை படமாக எடுத்து, கோடிகளில் கல்லா கட்டியதை கண்டு பிரமித்தது திரையுலகம். தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலுமே நடிகை சில்க் கதை கோடிகளைக் குவித்து தந்தது. இந்தியில் ஹிட்டடித்த நடிகை வித்யாபாலன், அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரீட்சயமானார். இந்நிலையில், மீண்டும் நடிகை சில்க் ஸ்மித்தாவின் கதையை படமாக எடுக்க களமிறங்கி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சில்க்காக சிம்மாசனமிட்டு அமர்ந்த ஸ்மிதா இறந்து 27 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், அவர் நடித்த படங்களைப் போலவே அவரைப் பற்றிய படங்களும் வசூலைக் குவித்து தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வௌகிறது. 

சில்க்

தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி புயலாக மையம் கொண்டவர் சில்க் ஸ்மிதா. விஜயலட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழில் 'வண்டிச்சக்கரம்' படம் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது பெயர் சில்க். அதுவே அவருக்கு பின்னாளில் பெயராக நிலைத்து போனது. 18 வருட சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். படம் ஓட சில்க் பாடலும் வேண்டும் என திரையுலகம் அவர் கால்ஷீட்டிற்காக காத்திருந்ததும் அவரது நடனத்தைப் பார்க்கவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூடியதும் உண்டு. இந்நிலையில் நடிகை சில்க் பயோபிக் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது. ஆஸ்திரேலிய நடிகையான சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'செய்' போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜெயராம் இயக்குகிறார். அடுத்த வருடம் இந்தப் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக சில்க் ஸ்மிதாவின் கதையைக் கொண்டு வித்யாபாலன் நடிப்பில் 'டர்ட்டி பிக்சர்' படமும், மலையாளத்தில் 'கிளைமாக்ஸ்' என்ற படமும் வந்தது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web